Preloader
+91 90945 00055 +91 91768 81874 kosainagaraan@gmail.com

தமிழே சிவம்

சிவமே இசை

கோசைநகரான் திருக்கயிலாய வாத்தியக்குழு

கோசைநகரான் திருக்கயிலாய வாத்தியக்குழு


பழங்கால தமிழர்களின் தமிழ் இசைக்கருவிகளை மீட்டெடுத்து அதனை அனைத்து ஊர்களின் வீதிகளிலும் இசைக்க வேண்டும். இதனால் மட்டும் தான் நமது பாரம்பரியத்தை மீண்டும் வெளிக்கொண்டு வரமுடியும். இந்த இசைக்கருவிகளையும், பண்பாட்டையும் தமிழையும் தமிழிசை பண்ணையும், வழிபாட்டையும் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் செய்யும் நிகழ்வுதான் கோசைநகரான் தமிழ்முறை திருமணம். இதற்கு எந்த பாகுபாடும் தேவையில்லை. தகுதி தரணியை ஆளும் தமிழனாக இருக்க வேண்டும்.



என்னுடைய பெயர் கேசைநகரான் சிவ.ச.சிவக்குமார், பின்னர் ( D.E.E.E) தொழிற்கல்வியில் மின்சாரத்துறைப்படித்து மகிழுந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து 2015 ஆம் ஆண்டு பணியிலிருந்து விலகி, தற்போது முழுநேரமாக, இசைக்கருவிகள் கண்காட்சி, பள்ளிகள், கல்லுரிகளில் இசைக்கருவிகள் விளக்கம் என்று வாழ்க்கையின் பாதை மாறிவிட்டது. [ அடியேன் கோயம்பேடு மாநகராட்சி பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரைப்படித்தேன். ]

தற்போது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இசைக்கப்பட்ட இசைக்கருவிகளை 108 வகை என்று வகைப்படுத்தியிருக்கிறோம். அதனை மீட்டெடுத்து இசைக்க வேண்டும் என்ற கொள்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

தமிழனாக இருந்தால் தமிழ்முறை திருமணம் செய்வொம்.